குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? இதெல்லாம் செய்யுங்க..!

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? இதெல்லாம் செய்யுங்க..!

உயரமாக, சீரான வளர்ச்சியுடன் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. வளர்ச்சியும் உயரமும் சரியாக இருக்க சத்தான உணவு, சில நல்ல பழக்கங்கள், உடல் பயிற்சிகளும் அவசியம். அவை என்னென்ன (Tips to increase height) என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்யலாம்?

சத்தான உணவுகள், ஊட்டச்சத்துகளைக் குழந்தைகள் சாப்பிட வேண்டியது முக்கியம். குழந்தையின் உயரம் தாய், தந்தை வழியாக, மரபியல் சார்ந்தும் தீர்மானிக்கப்படும். குழந்தைகளுக்கு எண்ணெயை உடலில் தடவி மசாஜ் செய்து, லேசாக கால் கைகளை நீட்டி விட வேண்டும். வேகம் கூடாது. எண்ணெய் வைத்து தலைக்கு ஊற்றுவதும் நல்லது. குழந்தையை நன்றாகத் தூங்க விடுங்கள். குழந்தைகள் தூக்கத்தில்தான் வளருவார்கள். ஆதலால், குழந்தைகளை நன்கு தூங்க விடுங்கள். தாய்ப்பால் குழந்தைக்கு மிக மிக அவசியம். 0 - 1 வயது வரை கட்டாயம். 1 - 2 வயது வரை முடிந்தால் கொடுக்கலாம். மிக மிக நல்லது. உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகள் உயரமாக வளர கால்சியம், புரோட்டீன், விட்டமின் டி சத்து தேவை. குழந்தையின் 6 மாதத்துத்திலிருந்தே உயரம், வளர்ச்சிக்கான உணவுகளைக் கொடுக்க வேண்டும். tips to increase height Image Source : Archanas kitchen
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
6 + மாத குழந்தைகளுக்கு, பாசிப் பருப்பு அரிசி போட்டு நெய் கலந்து சாதம், பாசிப் பருப்பு அரிசி சேர்த்து செய்த கிச்சடி கொடுக்க குழந்தையின் உயரம் அதிகரிக்கும். உருளைக்கிழங்கும் பட்டாணியும் ப்யூரியாக செய்து கொடுக்கலாம். சர்க்கரைவள்ளி கிழங்கு ப்யூரி நல்லது. கீரை மசியல், கீரை கிச்சடி மிக மிக நல்லது. சிறுகீரை, முளைக்கீரை, அரைக்கீரை போன்ற ஏதேனும் ஒன்றை பாசி பருப்பு சேர்த்துக் கொடுக்க குழந்தையின் வளர்ச்சி அதிகமாகும். பருப்பு தண்ணீர், காய்கறி தண்ணீர் கொடுக்கலாம். 8+ மாத குழந்தைக்கு மஞ்சள் கரு கொடுக்கலாம். 1 வயது + குழந்தைகளுக்கு வேகவைத்த முழு முட்டையை கொடுக்கலாம். சீரகம், நெய், பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு, அரிசி ஆகியவற்றை குழைய வேகவைத்து குழந்தைகளுக்கு பருப்பு சாதமாக கொடுக்க வேண்டும். குதிரைவாலி, சாமை சோறு ஆகியவற்றை சாப்பிட கொடுக்கலாம். காளான் உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். 6 + மாத குழந்தைகள் முதல் தேவையான தண்ணீரை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது மிக மிக அவசியம். முளைக்கீரையை 48 நாளைக்கு கூட்டு, மசியல், சூப், கிச்சடி, பருப்பு கலந்த சாதம், கீரை சாதமாக, துவையலாக, பொரியலாகக் கொடுத்து வந்தால் உயரம் அதிகரிக்கும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு அனைத்து சத்துகளையும் தரும் சிம்பிள் கிச்சடி ரெசிபி பச்சை நிற காய்கறி, கீரைகள், பயறு வகைகள், பழங்கள் அனைத்தும் சாப்பிட உயரம் அதிகரிக்கும். ராகி கூழ், ராகி கஞ்சி, தோசை, மால்ட், அடை, அல்வா, உப்புமா, சேமியா, புட்டு, கொழுக்கட்டை, ஊத்தப்பம், இட்லி, களி என ராகியால் தயாரித்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பனை வெல்லத்தால் தயாரித்த எள்ளு உருண்டை, கடலை உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, பொரி உருண்டை ஆகியவற்றை சாப்பிட கொடுங்கள். சத்து மாவு கஞ்சி செய்து கொடுக்க குழந்தைகள் நன்கு வளருவார்கள். வாரத்தில் 2-3 முறை மீன் உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பிரண்டை துவையல், புதினா துவையல் செய்து கொடுக்கலாம். அஸ்வகந்தா பவுடர், பனை வெல்லம், இளஞ்சூடான பால் சேர்த்துக் குடிக்கலாம். முருங்கைக் கீரை மாதம் 3 முறை சாப்பிட கொடுக்கலாம். சுண்டைக்காய் சாம்பார் செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். வால்நட், பாதாம், கருப்பு உலர்திராட்சை சாப்பிட கொடுக்கலாம். 5 வயது + குழந்தைகளை யோகா வகுப்பில் சேர்த்து விடலாம். உயரமாக வளருவார்கள். tips to increase height Image Source : Sandhurst இதையும் படிக்க: சிறுதானியங்களில் உள்ள சத்துகளால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்கள்... எப்போது சிறுதானியம் தரலாம்? பச்சிமோத்தாசனம், திரிகோணாசனம், தாடாசனம் ஆகியவை உயரத்தை அதிகரிக்கும் ஆசனங்கள். சூர்ய நமஸ்காரம் செய்திட உயரம் அதிகரிக்கும். நீச்சல் பயிற்சியில் சேர்த்துவிட்டால் குழந்தைகள் நன்கு வளருவார்கள். பாஸ்கெட் பால், ஃபுட் பால், ஸ்கிப்பிங் செய்தாலும் உயரம் அதிகரிக்க உதவும். கைகளால் கம்பி, கட்டை போன்ற ஏதாவது பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும். இந்தப் பயிற்சியை ஹாங்கிங் (Hanging) என்பார்கள். தினமும் 15 நிமிடங்கள் செய்யலாம். தாய், கரு வயிற்றில் இருக்கும்போதே நல்ல உயரமாக என் குழந்தை வளரும் என்ற எண்ணத்தை போடுங்கள். உயரமான மனிதர்கள் படத்தைகூட அடிக்கடி பார்க்கலாம். தினமும் 1-2 வாழைப்பழத்தை மாலை 4-6 மணியளவில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். தேங்காய்ப் பால், பாதாம் பால், பசும் பால் என மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். உளுந்து கஞ்சியில் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொடுக்கலாம். உளுந்து வடை, இட்லி, உளுந்து சாதம், உளுந்து துவையல், உளுந்து சட்னி, உளுந்து சத்து மாவு உருண்டை ஆகியவை உடல் வளர்ச்சிக்கும் உயரத்துக்கும் உதவும். இதையும் படிக்க: குழந்தையை பலசாலியாக்கும் 10 வகையான நம் ஊர் அரிசி வகைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null