கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தேவையான பாரம்பர்ய கொண்டாட்டங்கள் ஏன்?

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தேவையான பாரம்பர்ய கொண்டாட்டங்கள் ஏன்?

தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியான விஷயம். அதைப் பெண் குடும்பத்தாரும் ஆண் குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட பல விழாக்களை நாம் பாரம்பர்யமாக பின்பற்றி வருகிறோம். இதையெல்லாம் ஏன் கொண்டாட வேண்டும்? கொண்டாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? தொடர்ந்து பார்க்கலாம். முதலில் பெண் வயதுக்கு வந்தாலே, பல சடங்கு முறைகளைப் பின்பற்றி அதை நிகழ்ச்சியாகக் கொண்டாடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்து வருகிறது. பெண் பருவமடைந்து, மாதவிலக்கு அடைந்த நாள் முதல் 15-ம் நாள் வரை தாய்மாமன் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, மஞ்சள் கரைத்த நீரைத் தலையில் ஊற்றி, ஊஞ்சலில் ஆட்டி, நலுங்கு மாவு பூசி, பெண்ணைக் குளிப்பாட்டுவது வழக்கம். இதை மஞ்சள் நீராட்டு விழா என்பார்கள். அரைக்கீரை விதைப் பொடியை நல்லெண்ணெய் கலந்து கொடுப்பார்கள். சிலர் பச்சை முட்டையைக் குடிக்க கொடுப்பார்கள். உளுந்து மாவைக் களியாக கிண்டி நல்லெண்ணெய் கலந்து கொடுப்பார்கள். பருவமடைந்த பெண்ணின் கர்ப்பப்பை மற்றும் இடுப்பு எலும்பை வலுவாக்கவே இத்தகைய சத்தான உணவுகளைக் கொடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. திருமணத்துக்குப் பின் கர்ப்பமானால் இன்னும் நிறையக் கொண்டாட்டங்கள் இருக்கின்றன. இதை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்திருக்கின்றனர். அதைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

கோயில் தீர்த்தம் வழங்குதல்

பெண் கர்ப்பமான 3-வது மாதத்தில், கோயிலுக்கு சென்று மஞ்சள் கரைத்த நீரை அல்லது துளசி இலை ஊறிய நீரைத் தீர்த்தமாக குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.

கருப்பு நிற புடவை அணிதல்

கருவுற்ற 5-ம் மாதத்தில் பெண்ணின் வயிறு, கருவுற்றதைப் பிறருக்கு தெரிவிக்கும் விதமாக பெரியதாக தெரிவதால் , கண் திருஷ்டிகாக கருப்பு நிற புடவை அணியும் வழக்கத்தை சிலர் கொண்டுள்ளனர். கர்ப்பிணிகளின் மசக்கை குறி குணங்கள் குறைந்து விடவும், தாய் வீட்டிலிருந்து கருப்பு புடவை வாங்கி, கர்ப்பிணி பெண்ணுக்கு கொடுத்து அணிய சொல்லும் வழக்கமும் உள்ளது. pregnancy function Image Source : Selliyal

வளைகாப்பு

கருவுற்ற 7 அல்லது 9 வது மாதத்தில் பிறந்த வீட்டிலிருந்து கண்ணாடி, தங்கம், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட வளையல்களைப் பெண்ணுக்கு அணிவித்து, தாய் வீட்டில் அல்லது கணவர் வீட்டில் வளைகாப்பு நடத்துவது வழக்கம். 7வது மாதத்தில் வளைகாப்பு நடந்தால், 7 வகையான சாத உணவுகள் வழங்கப்படுகின்றன. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், தேங்காய் சாதம், மல்லி சாதம், எலுமிச்சை சாதம், புதினா சாதம் அல்லது வேறு ஏதேனும் சாத வகைகளை வழங்குகின்றனர்.

குழந்தை வரவேற்பு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன், மருத்துவமனை வாசலில் சிதறு தேங்காய் உடைத்து, சூடம் காட்டி வீட்டுக்கு அழைத்து வருவார்கள். அம்மா வீட்டில், தாயை மஞ்சள் கரைத்த தண்ணீரால் ஆரத்தி காட்டி வரவேற்பார்கள்.

தூளி கட்டுதல்

குழந்தைக்கு தொட்டில் கட்டி, அதில் குழந்தையை போட்டு ஆராரோ பாடுவார்கள். குழந்தைக்கு தொட்டில் கட்ட பருத்தியால் செய்யப்பட்ட சுத்தமான புடவை துணியை பெண்ணின் பெற்றோர் கொண்டு வருவர். இதையும் படிக்க : தொட்டில், தூளி, மெத்தை... குழந்தைக்கு எந்த படுக்கை சரியானது?

பெயர் சூட்டு விழா

குழந்தை பிறந்த 30வது நாளில், வீட்டின் பெரியவர்கள் முன்னிலையில் புண்ணியதானம் என்ற பெயரில், அரிசி மற்றும் உடைகளைத் தானமாக வழங்கி, அரிசியில் குழந்தையின் பெயரை எழுதுவார்கள். குழந்தையின் காதில், குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரை முதன் முதலாக சொல்லி மகிழ்வார்கள். ear piercing function Image Source : The Health Site
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

காதணி விழா

குழந்தை வளர்ந்து ஓராண்டு நிறைந்ததைக் கொண்டாடும் வகையில் அல்லது 8-வது மாத இறுதியில் குழந்தைக்கு மொட்டைப் போட்டு, காது குத்தும் வழக்கம் இருக்கிறது. குழந்தையின் தாய் மாமன் மடியில், குழந்தையை உட்கார வைத்து மொட்டை அடிப்பது, காது குத்தி விழா நடத்துவது வழக்கம். இதையும் படிக்க : குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? எப்போது மொட்டை அடிக்கலாம்? காதுக்குத் தோடு அணிந்து மகிழ்வார்கள். முன்பெல்லாம் குழந்தையின் பிறந்த நாள் தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரம் பார்த்து கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது ஆங்கில மாதத்தின் படி கொண்டாடப்படுகிறது.

ஏன் கொண்டாடப்படுகின்றன?

ஒவ்வொரு கொண்டாட்டமும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. இரு குடும்பங்களும் இணைந்து மகிழ்ச்சியுடன் இருக்கவே இத்தனைக் கொண்டாட்டங்கள். பிறக்கும் குழந்தை இருவீட்டாருக்கும் பொதுவாக சொத்து என்ற முறையிலும் இப்படி சேர்ந்து கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்படி கொண்டாட்டங்கள் அடிக்கடி நடந்தால், குடும்பங்கள் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பது மூலக்காரணம். கர்ப்பிணி பெண் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான், ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். அதனாலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுக்குப் பின்னரும் அறிவியல் காரணமும் மனதளவில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கமும் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் கொண்டாடுவது அவரவர் சுய விருப்பம் என்றாலும் தங்களுக்கு தேவையான மகிழ்ச்சி தரும் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவதில் தவறில்லை. இதையும் படிக்க : பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null