குழந்தையை பலசாலியாக்கும் 10 வகையான நம் ஊர் அரிசி வகைகள்...

குழந்தையை பலசாலியாக்கும் 10 வகையான நம் ஊர் அரிசி வகைகள்...

பாரம்பர்ய உணவுகள்தான் சிறந்தது என்று நமக்கு தெரியும். எனினும் நாம் வெள்ளையான பாலிஷ் போட்ட அரிசியை மட்டுமே குழந்தைக்கு தருகிறோம். மாற்றம் இன்றிலிருந்து தொடங்கட்டும். பெரும்பாலான குழந்தைகள் ரத்தசோகையுடன் உள்ளனர். ஏனெனில் வெள்ளை அரிசியில் இரும்பு சத்து இல்லை. ஆனால், பாரம்பர்ய அரிசியில் பல்வேறு சத்துகள் உள்ளன.

வெள்ளையான பொன்னி அரிசியில், பிரெட்டில் இருக்கும் அதே சர்க்கரை (100 கிளைசமிக் இண்டெக்ஸ்) உள்ளது. இதனை மட்டுமே சாப்பிடும் குழந்தைகள் எதிர்காலத்தில் சர்க்கரை நோய்க்குத் தள்ளப்படுகின்றனர்.

பொன்னி அரிசியை வில பல மடங்கு சத்துகள் கொண்ட பாரம்பர்ய ரக அரிசி உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

குழந்தைக்கு, தாய்ப்பாலூட்டும் தாய்மாருக்கு எந்த அரிசி சிறந்தது?

#1. கருங்குருவை அரிசி

  • பிற அரிசியை விட 4 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
  • 2 மடங்கு கால்சியம் சத்து அதிகம்.
  • நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது.
  • 50 கிளைசமிக் இண்டெக்ஸ் இந்த அரிசியில் காணப்படுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.
  • மூட்டுகளை வலுவாக்கும்.

#2. நீலச்சம்பா

  • 4 மடங்கு கால்சியம் சத்து உள்ளது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை உண்டால் நல்லது. தாய்ப்பால் சுரக்க உதவும்.
  • இதுவும் 50 கிளைசமிக் இண்டெக்ஸ் உள்ளது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடிரெசிபி

traditional rice

#3. குள்ளக்கார்

  • கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
  • நல்ல கொழுப்பு அதிகம்.
  • ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
  • நீண்ட நேரம் பசி தாங்கும்.
  • குழந்தைகளை பயணத்துக்கு அழைத்து சென்றால், அடிக்கடி உணவு தேட முடியாது. அந்த சமயத்தில் இந்த அரிசியை 10 மணி நேரம் ஊறவைத்து, வறுத்து பவுடர் செய்து வைத்துக்கொண்டால் கஞ்சியாக வெந்நீர் கலந்து கொடுக்கலாம்.
  • 50 கிளைசமிக் இண்டெக்ஸ் காணப்படுகிறது.

#4. காலா நமக் அரிசி

  • 1 மடங்கு கால்சியம் அதிகமாக உள்ளது.
  • ரத்த அழுத்தம் சீராகுகிறது.
  • உடலில் சோடியம் அதிகமாக சேராமல் தடுக்கிறது.
  • 50 கிளைசமிக் இண்டெக்ஸ் காணப்படுகிறது.

#5. பூங்கார் அரிசி

  • கர்ப்பிணிகளுக்கு இந்த அரிசியில் கஞ்சி வைத்துக் கொடுக்க சுகபிரசவத்துக்கு உதவும். கர்ப்பப்பை வலுவாகும்.
  • மாதவிடாய் பிரச்னை இருந்தால் முற்றிலுமாக சரி செய்துவிடும்.
  • இதில் புட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.
  • கால், இடுப்பு வலி நீங்கும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர்  ரெசிபி

#6. காட்டு பொன்னி

  • நார்ச்சத்து, புரதசத்துகள் அதிகம் உள்ளன.
  • கால்சியமும் கிடைக்கும்.
  • உடலுக்கு அதிக வலுவை தரும்.
  • செரிமான எளிதாக நடக்கும்.
  • குழந்தைகளுக்கு கஞ்சியாக, ப்யூரியாக செய்து தரலாம். புட்டு செய்து கொடுக்கலாம்.
  • வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

traditional rice for pregnant women

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

#7. குடவாலை அரிசி

  • 2 மடங்கு கால்சியம் அதிகம்.
  • 4 மடங்கு நார்ச்சத்து அதிகம்.
  • செரிக்கும் வேலை சுலபமாக நடக்கும்.
  • குழந்தைக்கு கொடுக்க செரிமானம் எளிதாகும்.
  • 66 கிளைசமிக் இண்டெக்ஸ் காணப்படுகிறது.

#8. மாப்பிள்ளை சம்பா

  • உடலுக்குத் தேவையான 2 மடங்கு ஆற்றல் கலோரிகள் கொண்டுள்ளது.
  • மற்ற அரிசிகளை இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் நார்ச்சத்து அதிகம்.
  • 65 கிளைசமிக் இண்டெக்ஸ் உள்ளது.

#9. கொட்டாரம் சம்பா

  • குழந்தைகளுக்கு தரவேண்டிய அரிசி இது.
  • குழந்தைகளுக்கு இந்த அரிசியால் தயாரித்த புட்டு, கஞ்சி, பாயாசம், பலகாரங்கள் செய்து தருவது நல்லது.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு மிக நல்லது. பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • வயிற்றில் மந்தம் தொடர்பான பிரச்னை இருந்தால் அவை நீங்கும்.
  • மலச்சிக்கலை நீக்கிவிடும்.

இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…

#10. சிவப்பு மற்றும் கறுப்பு கவுனி அரிசி

  • ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்,பைட்டோகெமிக்கல்ஸ், தயமின், விட்டபின் பி ஆகியவை உள்ளன.
  • அசைவம் சாப்பிடாத குழந்தைகளுக்கு சில விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்து கிடைக்காது. அந்த குழந்தைகளுக்கு இந்த அரிசியைத் தரலாம்.
  • வெளிநாடுகளில் இந்த அரிசியை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் இதன் சத்துகளை அவர்கள் புரிந்து கொண்டனர்.
  • குழந்தைக்கு புட்டு செய்ய சிறந்த அரிசி இது.
  • குழந்தைக்கு சத்து மாவு தயாரிக்க போகிறீர்கள் என்றால் இந்த அரிசியை சேர்த்து சத்து மாவு தயாரியுங்கள். உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

பாரம்பர்ய அரிசி வகைகள் எங்கு கிடைக்கும்?

amazing benefits of traditional rice

  • அனைத்து ஆர்கானிக் ஷாப்களிலும் கிடைக்கும்.
  • மொத்த விலை அரிசி விற்பனை கடைகளிலும் சொல்லி வைத்தால் தருவார்கள்.
  • ஆன்லைனில், ஃபேஸ்புக் குழுவில் பாரம்பர்ய அரிசி விற்பனை எனப் பல குழுக்கள் இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களிடமிருந்தும் வாங்க முடியும்.
  • பாரம்பர்ய அரிசி உணவு திருவிழா பல ஊர்களில் நடக்கிறது. அங்கு சென்றும் வாங்கலாம்.
  • நாம் கேட்டால்தான் நம்மை தேடி நல்ல உணவு வரும். நாம் தேடாமல், முயற்சி செய்யாமல் அப்படியே இருந்தால் நம் குழந்தைகளுக்கும் அடுத்த சந்ததியினருக்கும் நல்ல அரிசி, நல்ல உணவுகள் கிடைக்காமல் போக கூடும்.

குழந்தைக்கு எப்படி தரலாம்?

  • எட்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு, அரிசியை வேகவிட்டு நன்கு குழைத்து ப்யூரியாக தரலாம்.
  • அரிசியுடன் கொஞ்சம் பாசி பருப்பு சேர்த்து கஞ்சி போல செய்து தரலாம்.
  • பெரிய குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்து இனிப்பான கஞ்சியாக கொடுக்கலாம்.
  • இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது போல இந்த அரிசியை டிபன் அரிசிக்கு பதிலாக பயன்படுத்துங்கள். அவ்வளவு தான். ஆரோக்கியமான பாரம்பர்ய இட்லி, தோசை தயார்.
  • பருப்பு, காய்கறிகள், பாரம்பர்ய அரிசி சேர்த்து கிச்சடி போல குக்கரில் குழைய வேக வைத்துக் கொடுக்கலாம்.
  • பால் கொடுக்கும் தாய்மார்களும் இதுபோன்ற அரிசி வகைகளை சாப்பிட்டு வர, தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சத்துகள் சேரும்.
  • சர்க்கரைப் பொங்கலாக, பருப்பு கிச்சடி, காய்கறி கிச்சடி, தயிர் சாதம் போன்ற ஏதேனும் ஒரு முறையில் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்து வருவது நல்லது.
  • பாரம்பர்ய அரிசியில் புட்டு செய்து குழந்தைகளுக்கு தரலாம்.

இதையும் படிக்க: பாரம்பர்ய அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null