0-5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள்...

0-5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள்...

ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை தர வேண்டியது அவசியம். குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு முன்னதாகவே 5 தடுப்பு மருந்துகளைக் குழந்தைக்கு தரவேண்டும் (Vaccination for 0-5 years babies) என்பது அவசியம். இதைத் தவறவிட கூடாது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 30.3% குழந்தைகள் முதலாம் வயதுக்குள் செலுத்தப்பட வேண்டிய 5 தடுப்பு மருந்துகளை பெறுவதில்லை எனத் தெரிய வந்துள்ளது.

குழந்தையின் முதல் வயதுக்குள் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்துகள்

 • பிறந்தவுடன் கொடுக்க வேண்டியது
 • 6 வாரங்களில்
 • 10 வாரங்களில்
 • 14-வது வாரங்களில்
 • 9 மாதங்களில்

இந்த 5 தடுப்பு மருந்துகளையும் குழந்தைக்கு தவறாமல் அளிக்க வேண்டும்.

இந்த 5 தடுப்பு மருந்துகளைப் போட்டால், குழந்தையை 14 நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

தடுப்பூசியின் அவசியம்

பொதுவாக, தடுப்பூசிகளை சரியான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதால் 8 விதமான நோய்களில் இருந்து குழந்தைகளை காக்க முடியும்.

தற்போது இன்னும் சில முக்கிய தடுப்பு மருந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

vaccination for kids

தடுப்பூசி போட்டால் 14 நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கலாம்?

 • போலியோ
 • காச நோய்
 • தட்டம்மை
 • டிப்தீரியா
 • கக்குவான்
 • டெடனஸ்
 • ஹெபாடிடிஸ்-பி
 • பொன்னுக்கு வீங்கி
 • ரூபெல்லா
 • மூளைக்காய்ச்சல்
 • விட்டமின் ஏ குறைபாடு
 • நிமோனியா
 • மெனிஞிடிஸ்
 • ஓடிடிஸ்
 • காது தொற்று

ஆகிய 14 விதமான நோய்களில் இருந்து காக்க முடியும்.

ஒரே தடுப்பூசி பலவித நோய்களைத் தடுக்குமா?

ஆம்… ஒரே தடுப்பூசியில் பலவிதமான நோய்களுக்கான மருந்து கூறுகளை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொள்ள தேவையில்லை.

இதையும் படிக்க : ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?

தடுப்பூசிகளை எங்கு போடலாம்?

அங்கன்வாடி மையங்கள்

சமுதாய சுகாதார கூடங்கள்

தாலுகா/மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்

ரூபெல்லா, டிடி தடுப்பு மருந்துகள்

vaccination for child

தடுப்பூசியால் என்ன பயன்?

முழுமையான தடுப்பு மருந்துகளால் 8 விதமான தடுக்கக்கூடிய நோய்களால் ஏற்படக்கூடிய 7% அளவுக்கு குழந்தைகள் மரணத்தைத் தடுக்க முடியும்.

தடுப்பூசி அட்டவணை

பிறந்த குழந்தைக்கு

தடுப்பு மருந்து: பிசிஜி, போலியோ 0 டோஸ், ஹெபாடிடிஸ் – பி டோஸ்

பாதுகாக்கும் நோய்கள்: பிசிஜி, போலியோ, ஹெபாடிடிஸ் – பி நோய்கள்

6 வாரங்கள்

தடுப்பு மருந்து: பென்டாவேலன்ட் 1, ஓரல் போலியோ 1

பாதுகாக்கும் நோய்கள்: டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ், போலியோ, நிமோனியா, மெனிஞிடிஸ்.

இதையும் படிக்க : ஊட்டச்சத்துக் குறைபாடுக்கான 8 காரணங்கள்… அதன் பின்விளைவுகள்…

10 வாரங்கள்

தடுப்பு மருந்து: பென்டாவேலன்ட் 2, ஓரல் போலியோ 2

பாதுகாக்கும் நோய்கள்: டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ், போலியோ, நிமோனியா, மெனிஞிடிஸ்.

14 வாரங்கள்

தடுப்பு மருந்து: பென்டாவேலன்ட் 3, ஓரல் போலியோ 3

பாதுகாக்கும் நோய்கள்: டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ், போலியோ, நிமோனியா, மெனிஞிடிஸ்.

vaccination for kids

9 மாதங்கள்

தடுப்பு மருந்து: தட்டம்மை, விட்டமின் ஏ முதல் டோஸ்

பாதுகாக்கும் நோய்கள்: தட்டம்மை, விட்டமின் ஏ குறைபாடு

15 மாதங்கள்

தடுப்பு மருந்து: MMR

பாதுகாக்கும் நோய்கள்: அம்மை, தட்டம்மை, ரூபெல்லா

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்

18 மாதங்கள்

தடுப்பு மருந்து: டிபிடி பூஸ்டர் 1, ஓரல் போலியோ பூஸ்டர் 1, விட்டமின் ஏ-2 வது டோஸ், மீசில்ஸ் பூஸ்டர், மூளைக்காய்ச்சல் தடுப்பு மருந்து – தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் மட்டுமே.

பாதுகாக்கும் நோய்கள்: டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ், போலியோ, விட்டமின் ஏ குறைபாடு, தட்டம்மை, மூளைக்காய்ச்சல்

2- 4 ½ வயது (ஓவ்வொரு 6 மாதத்துக்கும்)

தடுப்பு மருந்து: விட்டமின் ஏ குறைபாடு 3, 6 வது டோஸ்

பாதுகாக்கும் நோய்கள்: விட்டமின் ஏ குறைபாடு

5 வயது

தடுப்பு மருந்து: DPT பூஸ்டர்-2, ஓரல் போலியோ பூஸ்டர்-2, விட்டமின் ஏ டோஸ்

பாதுகாக்கும் நோய்கள்: டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ், போலியோ, விட்டமின் ஏ குறைபாடு

vaccination for childrens

இந்திரா தனுஷ் என்ற திட்டம்

இந்தியா முழுவதும் அதிக நோய் தொற்று ஆபத்து நிறைந்ததாக கருதப்படும் 297 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக ‘இந்திரா தனுஷ் திட்டம்’ செயல்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : தலை, கண்கள், பிறப்புறுப்பு, தொப்புள் கொடி… முதல் மாத குழந்தையை பராமரிப்பது எப்படி?

5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு விட்டமின் ஏ

விட்டமின் ஏ-வை கூடுதலாக வழங்குவதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 24% குறைக்க முடியும் என உலக சுகாதார அறிவிக்கை தெரிவிக்கிறது.

வட இந்தியாவில் 10 லட்சம் குழந்தைகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி ‘விட்டமின் ஏ’ கூடுதல் டோஸ் வழங்கப்படுவதால் 11% குழந்தைகள் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விட்டமின் ஏ டோஸ் எப்போது தர வேண்டும்?

குழந்தை 9 மாதமாக இருக்கும்போதிலிருந்து, 5 வயதை குழந்தைகள் அடையும் வரையிலும் 9 முறையாவது விட்டமின் ஏ டோஸ் வழங்கப்பட வேண்டும்.

Source : UNICEF

இதையும் படிக்க : உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? இதோ சில அறிகுறிகள்… 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null