குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

குழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா… உங்களுக்காகவே இந்தக் காய்கறி பருப்பு கிச்சடி (Veg Dhal Kichadi Recipe).

சமச்சீர் சத்துகள் கொண்ட உணவு என இதைச் சொல்லலாம். இதில் புரதம், விட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, நல்ல கொழுப்பு ஆகியவை உள்ளன.

இதை 7, 8 மாத குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை சாப்பிட ஏற்றது.

காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி 

தேவையானவை:

  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பட்டை – 1
  • கிராம்பு – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1 நீளவாக்கில் அறிந்தது
  • பொடியாக அறிந்த தக்காளி – 1 சிறிய அளவு
  • பட்டாணி – 1 ஸ்பூன்
  • அறிந்த குடமிளகாய், கேரட் – 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
  • அரிசி – 1 கப்
  • சிறு பயறு – ½ கப்
  • கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் நெய் ஊற்றி சூடேற்றவும்.

நெய் சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.

பின் சீரகம் போட்டு பொரித்தவுடன், பெருங்காயம் சேர்க்கவும்.

அறிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி-பூண்டு சேர்த்து வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

நீள வாக்கில் அறிந்து பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறிது வதங்கியதும் பொடியாக அறிந்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.

பட்டாணி, அறிந்த குடமிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் சிறுபயறு, அரிசி சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வந்ததும் நிறுத்தி விடலாம்.

இறக்கியதும் கொத்தமல்லி தூவி கலக்கவும்.

veg dhal kichadi

Image Source: Credit hungryforever.com

இதையும் படிக்க: 6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

குறிப்பு:

7 – 8 மாத குழந்தைகள் முதல் இந்த பருப்பு கிச்சடியை நீங்கள் தரலாம்.

குழந்தைகளுக்கு என்பதால் காரத்தை அவரவர் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

அரிசி பதிலாக சிறுதானியங்களான சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவற்றைகூட சேர்த்துக் கொள்ளலாம்.

சமச்சீரான உணவு இது என்பதால் மதிய உணவாக இதைச் சமைத்துக் குழந்தைக்கு கொடுக்கலாம்.

உங்கள் குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ப காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

veg dhal kichadi babies

Image Source: Credit cookclickndevour.com

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு அனைத்து சத்துகளையும் தரும் சிம்பிள் கிச்சடி ரெசிபி

பலன்கள்

  • சமச்சீரான சத்துகள் இருப்பதால், தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
  • பெருங்காயம், சீரகம், பட்டை ஆகியவை சேர்ப்பதால் வயிற்றுக்கு நல்லது.
  • சிறு பயறு சேர்ப்பதால் தேவையான புரதச்சத்துகள் கிடைக்கும். தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
  • பட்டாணி, குடமிளகாய், கேரட் ஆகியவற்றிலிருந்து விட்டமின்கள் கிடைக்கும். மேலும், இவற்றில் உள்ள நார்ச்சத்துகள் குழந்தைக்கு மலமிலக்கியாக செயல்படும்.
  • நெய் சேர்த்துக் கொடுப்பதால் போஷாக்கு கிடைக்கும். கல்லீரலுக்கு நல்லது.
  • குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற உணவாக அமையும்.

இதையும் படிக்க: சில நிமிடங்களில் செய்ய கூடிய 5 வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null