விந்தணுகள் அதிகமாக உற்பத்தியாக உணவுகள்! ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்!

விந்தணுகள் அதிகமாக உற்பத்தியாக உணவுகள்! ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்!

இன்றைய சூழலில் பலருக்கும், வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தையின்மை பிரச்சனை நிலவுகிறது. இந்த குழந்தையின்மை பிரச்சனை 6ல் 1-வருக்கு என்ற அடிப்படையில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குழந்தையின்மை (அ) குழந்தை வரம் தள்ளிப்போகும் தம்பதிகளில், 40 சதவிகிதம் ஆண்களால் தான் இந்தப் பிரச்சனை வருவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. விந்து நீரில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் உயிர்ப்புத்தன்மை ஆகியவையே ‘ஆண்மை’-க்கு மிகவும் முக்கியமானது.

இதில் விந்தணுக்களின் உயிர்ப்புத்தன்மை என்பது, ஒரு விந்தானது ஆக்டிவ்வாக செயல்படுதல் மற்றும் கருமுட்டையை சென்றடைந்தால். ஏனெனில் விந்தணு விரைவாகச் சென்று கருமுட்டையை அடைந்தால் தான் கரு உருவாகும். இதில் ஆண் மலட்டுத்தன்மை என்பது, குறைந்த அளவிலான விந்தணு எண்ணிக்கையும், விந்தணு உயிர்ப்பில்லாமல் நீர்த்துப்போதலுமே! மேலும் இதனால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைவது, வீரியம் குறைவது, ஆண்மையும் குறைவது போன்ற சிக்கல்களும் கூடவே வருகிறது.

இந்த ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களை அறிவியல் ரீதியாக எளிதில் சரி செய்யலாம் என்றாலும், உணவுகள் மற்றும் உணவு முறைகள் மூலமாகவே சரி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆம்! விந்தணுக்களை உணவுகள் மூலமாகவே அதிகரிக்க செய்யமுடியும், ஆண்மையை அதிகரிக்க இயற்கை உணவுகள் போதும் எனவும் நிபுணர்கள் சொல்கிறார்கள். அவை என்ன உணவுகள் என பார்க்கலாமா?!

விந்தணுகள் அதிகமாக உற்பத்தியாக ‘மன்மத’ உணவுகள்!

விந்தணுக்கள் அதிகரித்து வீரியம் ஏறினால், வீட்டில் குதூகலம் தான்! அப்படி உங்கள் ஆண் வீரியமாக சீறிப்பாய சில ‘மன்மத’ உணவுகள் முக்கியம். அது என்ன மன்மத உணவுகள் என்கிறீர்களா? அவைதான் ஆண்மையை எக்கச்சக்கமாக அதிகரிக்கும் உணவுகள். பார்க்கலாமா?!

பாதாம்

பாதாம் பருப்புகளில் பைபர்,மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள், ஆண்மையை அதிகரித்து, ‘நீண்ட’ நேர உடலுறவிற்கு வழிவகை செய்கிறது. தொடர்ந்து பாதம் எடுத்துக்கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஒவ்வொரு விந்தணுவின் தரத்தினையும் இது அதிகரிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆக பாதாம் சாப்பிட்டால் ‘எழுச்சி’ நிச்சயம்.

முட்டை

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்து நீர்த்துப்போகாமல் இருக்கவும் முட்டை பெரும் உதவியாக உள்ளது. முட்டையில் உள்ள புரோடீன் மற்றும் வைட்டமின் E சத்துக்கள், விந்தணுக்களை ஜிகு ஜிகுவென அதிகரிக்க விடாமல் தடுக்கும் தன்மையை நீக்குகிறது. ஆகவே, விந்தணு பாதிக்கப்படாமல் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் சுரக்கும். இது குழந்தை உருவாவதற்கு வழிவகை செய்யும்.

மாதுளை

மாதுளை ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால், விந்து நீர்ப்பு இல்லாமல், விந்துவின் சக்தியும் அதிகரிக்கும் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இந்த மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிலுள்ள அணுக்களையும் தூண்டிவிடுகிறது. இந்த சத்துக்கள் இல்லாவிட்டால், உடலின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, விந்தணுவின் குவாலிட்டியும் குறைந்துவிடும். மாதுளையில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க: மாதுளை பயன்கள்

கீரைகள்

கீரைகளில் வைட்டமின் பி9 சத்துக்கள் எனப்படும் ஃபோலிக் ஆசிட் உள்ளது. இது ஆண்மையை இயற்கை முறையில் அதிகரிக்க வழிவகை செய்கிறது. தொடர்ந்து நல்ல கீரை வகைகளை உணவில் சேர்த்துவந்தால், ஆண்களால் குழந்தை பிறக்காமல் போகும் பிரச்சனையே இல்லாமல் செய்துவிடும். மேலும் இது, தம்பதிகளின் உடலுறவு நேரத்திலும் உற்சாகம் பொங்கவைக்கும். அனைத்திலும் கீரை தான் டாப் என சொல்லவைக்கும்.

முருங்கை கீரை

முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவிக்குள் காதல் அதிகரிக்கும். படிக்க: முருங்கை கீரை பயன்கள்

மேலும் புரோக்கோலி, வால்நட்ஸ், பூண்டு, தக்காளி, வாழைப்பழம், டார்க் சாக்லேட் மற்றும் சில உணவுகளும் ஆண்மையை இயற்கை முறையில் அதிகரித்து, விந்தணுக்களை சக்திவாய்ந்ததாக மாற்றி, வீட்ட்டுக்காரருக்கு வீரியத்தை ஏற்றிவிடும். மேலே சொன்ன தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாய் இருக்குமென நம்புகிறோம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null