உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

உடல் எடை என்பது சரியான அளவில் இருக்க வேண்டும். அதாவது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடை இருப்பது முக்கியம். அந்த சராசரி அளவிற்கு மிக அதிகமான உடல் எடை கொண்டிருப்பதும் ஆபத்து தான். அதேபோல மிக குறைவான உடல் எடை கொண்டிருப்பதும் நல்லது கிடையாது. உடல் எடையைக் குறைக்க பல்வேறு விதமான வழிகள் சொல்லப்படுகின்றன. உணவில் இருந்து உடற்பயிற்சி வரை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் உடல் எடையை ஏற்றுவது சற்று சவாலான விஷயம்தான். ஒருசிலர் மிகவும் ஒல்லியான உடல்வாகுடன் காணப்படுவார்கள். இது அவர்களின் உடல் அமைப்புக்கு அழகான தோற்றத்தைத் தராது. ஆக எந்த வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம் என்று யோசிப்பார்கள். அதேபோல ஒரு சில குழந்தைகள் மிகவும் நோஞ்சானாகக் காணப்படுவார்கள். அதனால் இவர்களின் பெற்றோர்கள் அதிக அளவு வருத்தம் கொள்வார்கள். என்ன சாப்பிட்டாலும் என் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவே மாட்டேன் என்கிறது என்பது பல தாய்மார்களின் புலம்பலாக உள்ளது.

ஆக இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது என்னென்ன உணவுகளைச் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதுதான். இந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என்று அனைவருமே உடல் எடையை அதிகரித்துக் கொள்ள இயலும். வாருங்கள் மேலும் வாசிக்கலாம்!

உடல் எடையை அதிகரிக்க உணவுகள்

எள்ளு

மிகவும் மெலிதான எடை உள்ளவர்களுக்கு எள்ளு கைகொடுக்கும். இவர்கள் இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் எடை சிறப்பாக அதிகரிக்கும். எள்ளு சட்னி ,எள்ளுப்பொடி ,எள்ளுருண்டை போன்ற உணவுகளை இதிலிருந்து தயாரிக்க முடியும். எள்ளு ஒரு சுவையான உணவுப் பொருளும் கூட! ‘இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது நம் முன்னோர்களின் வார்த்தை என்பதை மறக்க வேண்டாம்.

சால்மன் மீன்

இந்த மீன்களில் புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. ஆக இதை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த மீன்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.

அவகேடோ பழங்கள்

இந்த பழங்களில் கலோரிகள், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவு காணப்படுகின்றன. மற்ற உணவுகளைப் பொறுத்தவரையில் சமைத்துச் சாப்பிட வேண்டிய சூழல் இருக்கும். ஆனால் இது மாதிரியான பழங்களை எளிதாகச் சாப்பிட முடியும். தினம் ஒரு அவகேடோ பழத்தைச் சாப்பிடுவதன் மூலம், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

நெய்

நெயில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. இதில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. இதை உணவில் சேர்க்கும் போது உணவின் சுவை அதிக அளவு கூடிவிடும். உதாரணமாகச் சாம்பார், தோசை, பலகாரங்கள் போன்றவற்றில் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நிச்சயம் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

முட்டை

உடலின் தசை மற்றும் எலும்புகளை உறுதி ஆக்குவதில் முட்டை சிறந்த பங்காற்றும். அதனாலேயே விளையாட்டு வீரர்கள் தினமும் முட்டையைச் சாப்பிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் உடல் எடை குறையாமல் இருக்கும். மேலும் உடல் வலிமையோடு காணப்படும். முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை கருக்கள் என்று இரண்டுமே அதிகளவு சத்துகளைக் கொண்டன. மிகவும் மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு முட்டை சிறந்த உணவு.தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் எடை மேம்படும் என்பது உறுதி.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அதே வேளையில் இந்த பழங்கள் உடல் எடையை அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டன. உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் இந்த உலர்ந்த பழங்களைத் தினமும் சாப்பிடலாம்.குறிப்பாக உலர்ந்த திராட்சைகள் நல்ல பலன் தரும்.

படிக்க: அத்திப்பழம் தரும் நன்மைகள்

பால் பொருட்கள்

பால் பொருட்களில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் சத்து ,புரதச் சத்து , பல்வேறு விட்டமின்கள் மற்றும் கால்சியம் அதிக அளவு காணப்படுகின்றன. பால் , வெண்ணெய் ,தயிர் ,பாலாடைக் கட்டிகள் முதலியன பால் பொருட்களில் அடங்கும்.
உடல் எடையை அதிகரிக்க இவற்றைச் சாப்பிடுவது உகந்தது.

அரிசி

அரிசியில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் சத்து காணப்படுகின்றன. உடல் எடையை கூட்ட வேண்டும் என்று தீர்மானத்தில் உள்ளவர்கள் அரிசி சாப்பாடு சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி சாப்பிட இன்னும் உகந்தது.

கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகளில் சரியான அளவு கார்போஹைட்ரேட் சத்து உள்ளது. இந்த சத்து உடல் எடையைக் கூட்ட உதவும். ஆக உணவில் உருளைக் கிழங்கு ,சர்க்கரைவள்ளிக் கிழங்கு ,சேனைக் கிழங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்வது உகந்தது.

பருப்புகள்

பாதாம் பருப்புகள், முந்திரிப் பருப்புகள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளன. இந்த பருப்புகளைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் கட்டாயம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். பாதம் தரும் பயன்கள்..

இறைச்சி

உடல் எடையை அதிகரிக்க வைப்பதில் அசைவ உணவு பெரும் பங்கு ஆற்றுகின்றன. ஆட்டு இறைச்சி ,கோழி இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லை காடை,கௌதாரி,பன்றி,முயல் , இறால் போன்ற எந்த வகை அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பீன்ஸ்

இந்த காயில் அதிகளவு புரதச்சத்து காணப்படுகின்றன. சுமார் 300 கிராம் கலோரிகள் இதில் உள்ளன. அசைவ உணவு சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி அதிக அளவு சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உண்பது உகந்தது .இதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணெய்

பொதுவாகவே எண்ணெய்கள் அதிக அளவு கொழுப்புச் சத்துகளைக் கொண்டன.
அந்தவகையில் ஆலிவ் எண்ணெய்யில் அதிக அளவு கலோரிகளும் உள்ளன இந்த எண்ணெய் கொண்டு உணவு தயாரித்துச் சாப்பிடுவது நல்லது. உடல் எடை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் கடலையெண்ணெய், தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் முதலிய அனைத்து எண்ணெய்களும் உடல் எடை அதிகரிப்புக்கு உகந்தன.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் விட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட் சத்து உள்ளன.தினமும் இரண்டு அல்லது மூன்று வாழைப்பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். குறிப்பாக நேந்திர பழத் துண்டுகளைத் தேனுடன் சேர்த்து தினமும் எடுத்துக் கொள்வது உகந்தது. இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.இது உடல் எடையை அதிகரிக்கப் பெரிய அளவில் உதவி புரியும் .

உளுந்து

உடல் எடையை அதிகரிக்க உளுந்து கைகொடுக்கும். குறிப்பாகப் பெண்கள் உளுந்து சேர்த்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது மிகவும் ஏற்றது. உளுந்து வடை , உளுந்து கஞ்சி போன்றவற்றைத் தயாரித்துச் சாப்பிடலாம்.

தேங்காய்

தேங்காயில் நிறைவான அளவு கொழுப்புச் சத்து உள்ளது. பொரியல் ,சட்னி , பலகாரங்கள் போன்ற உணவுகளில் தேங்காய் சேர்த்துப் பலனடையலாம். அதேபோல வாரம் இரண்டு முறை தேங்காய்ப் பால் தயாரித்துச் சாப்பிடலாம். இதன் மூலம் உடல் எடை ஏற தொடங்கும்.

டார்க் சாக்லேட்

இதில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளன. மேலும் இதில் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளன. உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளவர்களுக்கு இது உகந்தது.

ராகி

உடல் எடையை அதிகரிக்க ராகி துணைபுரியும். ராகி கஞ்சி ,ராகி முறுக்கு ,ராகி தோசை என்று பலவிதமான உணவுப் பொருட்களை இதன் மூலம் தயாரிக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை ஏறும்.

சில காய்கறிகள்

இதைத் தவிர என்னென்ன காய்கறிகளைச் சாப்பிட்டால் உடல் எடை ஏறும் என்று பார்க்கலாம்.

  • பீட்ரூட்
  • பட்டாணி
  • சோளக்கருது
  • பூசணிக்காய்

சில பழங்கள்

இதைத் தவிர என்னென்ன பழங்களைச் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்று பார்க்கலாம்.

இந்தப் பதிவின் மூலம் எந்தெந்த உணவுகளைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். இனி இந்த உணவுப் பட்டியலைச் சரியாகப் பயன்படுத்தி உங்கள் உடல் எடையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்துப் பயனடையுங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null