0-6 மாத குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் தரக்கூடாது? என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

0-6 மாத குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் தரக்கூடாது? என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்ந்திட முடியுமா எனப் பலரும் கருத்து வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.

ஏன் 6 மாதத்துக்கு முன் தண்ணீர் தரக்கூடாது?

தாய்ப்பாலிலே 85% நீர்ச்சத்து இருப்பதால், தனியாகக் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 மாத குழந்தைக்கு மினரல் வாட்டர், நிலத்தடி நீர் - குடிநீர் போன்ற எதுவும் தேவையில்லை. 6 மாதம் முடியாத குழந்தைகளுக்கு, தண்ணீர் கொடுத்தால், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளும் ஃபார்முலா மில்கில் உள்ள ஊட்டச்சத்துகளும் உறிஞ்சப்படும். உடலில் ஊட்டச்சத்துகள் சேராமல் தடுக்கப்படும். வயிறு விரைவில் நிறைந்துவிடும். இந்த உணர்வால் குழந்தைகள் தாய்ப்பாலை சரியாகக் குடிக்க மாட்டார்கள். உடலில் உள்ள சோடியத்தை அதிக தண்ணீர் கரைத்து விடலாம். உடலில் எலக்ட்ரோலைட் சீரற்ற அளவில் இல்லாமல் போகலாம். திசுக்கள் வீக்கமடையும் பிரச்னைகளும் வரலாம். குழந்தையின் சிறுநீரகங்கள் அந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. அதிகபடியானத் தண்ணீர் குழந்தையின் முகத்தை வீக்கமடைய செய்யும். கண்களை சுற்றி பஃபினெஸ் பிரச்னை வரலாம். வெப்ப காலமாக இருந்தாலும், பனிக்காலமாக இருந்தாலும் குழந்தைக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய்ப்பாலிலே நீர்ச்சத்துகளே போதும். அதுவே தண்ணீர் தாகத்தை தணிக்கும். ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தையாக இருந்தாலும், 6 மாதம் வரை தண்ணீர் தனியாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், வாட்டர் இன்டாக்ஸிஃபிகேஷன் (Water intoxification) எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். when baby can drink water Image Source : maerakluke இதையும் படிக்க: குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய ஹோம்மேட் நேச்சுரல் வேப்பர் ரப் செய்முறை...

Water intoxification வந்த குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

மென்டல் ஸ்டேடஸ் - குழப்ப நிலை, சோர்வு, எரிச்சல் மனநிலை. உடலின் வெப்ப நிலை குறைந்து காணப்படுதல். முகத்தில் வீக்கம். பஃப்வினெஸ். வலிப்பு. இதையும் படிக்க: குழந்தைகள், பெரியவர்களுக்கு வலிப்பு வராமல் இருக்க எந்த உணவுகளை சாப்பிட கூடாது?

எப்போது தண்ணீர் கொடுக்கலாம்?

6 மாதம் ஆன குழந்தைக்கு, தண்ணீர் கொடுக்கலாம். குழந்தைக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கொடுப்பது நல்லது. 6-12 மாதங்கள் வரை, குழந்தை கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கொடுக்கலாம். ஒரு வயது ஆன பிறகு, தண்ணீர் நன்றாகவே குடிக்க வைக்கலாம். குழந்தையை தண்ணீர் குடிக்க சொல்லி நீங்களும் நினைவுப் படுத்தலாம். குழந்தையின் 3 வயது வரை, வெந்நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு பெரியவர்கள் குடிக்கும் தண்ணீரே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

ஃபார்முலா மில்கை தண்ணீரில் கலக்கலாமா?

அளவே இல்லாமல் நீங்களாக தண்ணீரை சேர்த்துக் கலக்க கூடாது. ஃபார்முலா மில்கின் அட்டையில், எவ்வளவு தண்ணீர் சேர்க்கப்படலாம் என சொல்லி இருக்கிறதோ, அந்த அளவு சேர்த்தால் மட்டும் போதும். அதிகமாக சேர்க்க கூடாது. அதிக தண்ணீர் சேர்த்தால், குழந்தைக்கு சேர வேண்டிய நுண் ஊட்டச்சத்துகள் சேர விடாமல் தடுக்கும். is safe to drinking water before 6 months Image Source : Daily Mirror இதையும் படிக்க: 0-2 வயது குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் தரக்கூடாது?

குழந்தைக்கு நீர்ச்சத்து குறைபாடு (டீஹைட்ரேஷன் பிரச்னை) வந்தால்?

மருத்துவரிடம் அழைத்து சென்று காண்பிக்கலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் பீடியாலைட் அல்லது இன்ஃபாலைட் அல்லது எலக்ட்ரோலைட் டிரிங்க் போன்றவைத் தரலாம். ஃபார்முலா மில்க் தயார் செய்ய எந்தத் தண்ணீர் கலக்கலாம்? நீங்கள் பயன்படுத்தும் குடிநீரே பயன்படுத்தலாம். உங்களது ஏரியா அதிக ஃப்ளோரைட் கலந்த குடிநீராக இருந்தால், அப்போது நீங்கள் மினரல் பாட்டில் நீரைப் பயன்படுத்தலாம். கொதித்து, வடிகட்டி ஆற வைத்த குடிநீரை குழந்தையின் ஃபார்முலா மில்க் தயாரிக்கப் பயன்படுத்துங்கள்.

6 மாத + குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை?

1 அவுன்ஸ் = 2 டேபிள் ஸ்பூன். 6 மாத + குழந்தைகளுக்கு 2-4 அவுன்ஸ் தண்ணீர் கொடுக்கலாம். மலச்சிக்கல், அதிகமான வெயில் போன்ற சூழ்நிலையில் 6-8 அவுன்ஸ் தண்ணீர் கொடுக்கலாம். 12 மாதம் முடிந்த குழந்தைகளுக்கு, பால், மோர், தண்ணீர் போன்றவை தரலாம். உணவிலிருந்து நீர்ச்சத்து கிடைக்கும்படி குழந்தைகளின் உணவை அமைத்துக் கொள்ள வேண்டும். ஜூஸ், ஸ்மூத்தி, சூப், சத்து மாவு கஞ்சி போன்றவை தரலாம். குழந்தையின் சிறுநீர் மஞ்சளாக இருந்தால், நீங்களே குழந்தை குடிக்கும் தண்ணீர் அளவைக் கொஞ்சம் அதிகரித்துக் கொள்ளுங்கள். பெரியவர்கள் குடிக்கும் அளவு தண்ணீரை குழந்தைகளுக்கு தர கூடாது. இதையும் படிக்க: குழந்தைக்கு ஏற்படும் குமட்டல், வாந்தி… சிம்பிளான வீட்டு வைத்திய முறைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.  

null

null