குழந்தைகளுக்கு சிறுதானியம் மிக சிறந்த உணவு. குளுட்டன் சிறிதும் இல்லை. எனவே அலர்ஜி ஏற்படாது. சத்துகள் கொண்டது. எளிதில் செரிமானமாகும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியது.
என்னென்ன சத்துகள் உள்ளன?
புரதம், விட்டமின் பி, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, மெக்னிஷியம் ஆகியவை நிறைந்துள்ளன.
காப்பர், ஜின்க், மாங்கனீஸ் சத்துகளும் உள்ளன.
அதிகளவில் நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது.
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன.
அரிசி, கோதுமையைவிட அதிக சத்துகளைக் கொண்டுள்ளது.
குழந்தைக்கு எப்போது சிறுதானியங்களைத் தரலாம்?
6 மாத தொடக்கத்தில்கூட சிறுதானியங்களை குழந்தைக்கு கொடுக்கலாம்.
6-8 மாதத்துக்குள் சிறுதானியத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்தி விடுங்கள்.
முதல் முறையாக சிறுதானியத்தை கொடுக்கும்போது ஒரு ஸ்பூன் அளவு கொடுத்துப் பாருங்கள். பிறகு சிறிது சிறிதாக அளவை கூட்டி கொள்ளலாம்.
என்னென்ன பலன்கள்?
எளிதில் செரிமானமாகும்
ஆல்கலைன் அதிகம் உள்ளதால் செரிமானமாவது மிக எளிமையாக நடக்கும்.
மெட்டபாலிக் ரேட்
சேதமான திசுக்களை சரிசெய்யும். உடலில் வளர்சிதை மாற்றத்தை சீர் செய்யும்.
இரும்புச்சத்து குறைபாடு
உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், சிறுதானியம் சாப்பிட குறைபாடு நீங்கும்.
எலும்பு வளர்ச்சி
கால்சியம் இருப்பதால் வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
மலச்சிக்கல் நீங்கும்
மலக்குடலை சுத்தம் செய்யும். குடலை சுத்தமாக பராமரிக்க உதவும்.
Image Source : Padhus Kitchen
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
மனம் அமைதியாகும்
செரோடொனினை இயக்குவதால் குழந்தையின் மனநிலை நல்லபடியாக இருக்கும்.
எந்த காலத்தில் சிறுதானியத்தை குழந்தைக்கு தரலாம்?
வெயில், மழை, பனி என எல்லாக் காலத்திலும் சிறுதானியங்களைப் பயன்படுத்தலாம்.
என்னென்ன சிறுதானியங்கள் உள்ளன?
ராகி (கேழ்வரகு)
அரிசியைவிட 30 மடங்கு கால்சியம் அதிகமாக உள்ளது.
பாலைவிட இதில் கால்சியம் மிக அதிகம்.
அரிசியைவிட 10 மடங்கு நார்ச்சத்துகளும் அதிகம்.
செரிமானத்துக்கு மிகவும் உகந்தது.
திணை
உடலுக்கு தெம்பை அளிக்க வல்லது.
கஞ்சி, கூழ், செர்லாக் என எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
உடலுக்கு எனர்ஜியை அளிக்கும்.
குதிரைவாலி
விட்டமின் பி12, புரதம் நிறைந்துள்ளன.
இரும்பு சத்தும் மிக அதிகம்.
கஞ்சி, கூழ், தோசை, பொங்கல் என அனைத்தும் செய்யலாம்.
வரகு
புரதமும் நார்ச்சத்தும் மிக அதிகம்.
குழந்தைகளுக்கு எல்லாவிதமான உணவுகளிலும் வரகை சேர்க்கலாம்.
சாமை
சாமை தயிர் சாதம், தயிர் கிச்சடி செய்து தர சத்தும் ருசியும் அதிகம்.
சாமை சாப்பிட ஆமையின் ஆயுள் கிடைக்கும் என்ற பழமொழிகூட உள்ளது.
கம்பு
விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.
எல்லாவித ரெசிபியும் செய்ய முடியும்.
வெயில் காலத்துக்கு மிக மிக ஏற்றது.
சோளம்
இதில் சிறிதளவுகூட அலர்ஜி ஏற்படுத்தும் குளுட்டன் பொருள் இல்லை.
தாதுக்கள் நிறைந்துள்ளன.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி
சிறுதானிய ரெசிபி
Image Source : Fit Foodie Nutter
மில்லட் கஞ்சி
தேவையானவை
- கேரட் ப்யூரி - 2 ஸ்பூன்
- ஆப்பிள் ப்யூரி - 2 ஸ்பூன்
- மஞ்சள் - ஒரு சிட்டிகை
- நெய் - 1 டீஸ்பூன்
- வரகு அல்லது சாமை அல்லது குதிரைவாலி - 2 ஸ்பூன்
செய்முறை
- அரை மணி நேரம் சிறுதானியத்தை ஊறவைக்கவும்.
- பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- அதில் கழுவி ஊறவைத்த ஏதேனும் ஒரு வகை சிறுதானியத்தைப் போடவும்.
- மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- பாதி வெந்ததும் கேரட் ப்யூரி, ஆப்பிள் ப்யூரி சேர்த்துக் கலக்கவும்.
- இவை நன்கு வெந்ததும் இறக்கிவிடலாம்.
- இளஞ்சூடான மில்லட் கஞ்சியை குழந்தைக்கு தரலாம்.
இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null