இந்தியன் கழிப்பறையில் குந்த வைப்பது போல உட்கார வேண்டும் (Squating Position). வெஸ்டர்ன் கழிப்பறையில், நாற்காலியில் அமர்வதுபோல உட்கார வேண்டும். இந்திய கழிப்பறையில் நமது உடல் 45 டிகிரி அளவுக்கு வளைகிறது. வெஸ்டர்ன் கழிப்பறையில் உடல் 90 டிகிரி அளவே வளைகிறது. இதுதான் பிரச்னையே…
ஸ்குவாட்டிங் நிலையில் (குந்தி உட்காரும் முறை) மாடர்னாக இல்லாவிட்டாலும், அதுதான் சரியான முறையும்கூட. பல நாடுகளில் இந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் இந்த முறையே கடைபிடிக்கப்பட்டுள்ளது.
ஏன் ஸ்குவாட் நிலையில் உட்காருவது சரி என்கிறார்கள்?
- மலத்தின் பயணம் எளிதாகும். விரைவில் மலம் வெளியே வர குந்தி உட்காரும் முறையே உதவும்.
- மலம் வேகமாக வெளியேற உதவுகிறது.
- மலம் முழுமையாகவும் வெளியேறிவிடும். எதுவும் உடலில் உள்ளேயே தங்காது.
- மூல நோய், குடல் தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புகள் இல்லை.
அறிவியல் என்ன சொல்கிறது?
Image Source : Daily Mail
- ஸ்குவாட் நிலைகூட ஒரு ஆசனம்
- அடிவயிற்றில் சூப்பர்ஃபிஷியல் தசைகள் உள்ளன. மலவாயில் உள்ள ஸ்பின்க்டர் திறக்கப்பட்டு மலம் எளிதில் வெளியேற அனுமதிக்கிறது.
- வெஸ்டர்ன் கழிப்பறையில் உட்கார்ந்தால், சில சமயங்களில் ரெக்டம் மூடிக்கொள்ளும். இதனால் மலம் முழுமையாக வெளியேறாது.
- இதுவே ஸ்குவாட் நிலையில் உட்கார்ந்தால், தசைகள் தளர்வடைந்து மலம் எளிதில் வெளியேறும்.
- ஸ்குவாட் நிலையில் உட்கார்வதால் இடுப்பு வளையும் தன்மை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
- ஸ்குவாட்டிங் நிலையை மலாசனா எனும் யோகத்தில் சொல்கிறார்கள்.
- இந்த நிலையில் உட்கார்ந்து மலம் கழிப்பதே உடலுக்கு நல்லது என யோகமும் சொல்கிறது.
இதையும் படிக்க : உடல் எடையை குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்…
இந்திய கழிப்பறை சிறந்தது… அதற்கான 8 நிரூபமனமான காரணங்கள்
சுகாதாரமானது
- இந்தியன் கழிப்பறை சுகாதாரமானது. இதற்கு முன் கழிப்பறை பயன்படுத்தி சென்றவரின் கிருமி பரவாது.
- ஆனால், வெஸ்டர்ன் கழிப்பறையில் அப்படியே பரவிவிடும். சீட் பேட் மூலமாக பரவும்.
- வெஸ்டர்னில் உள்ள தண்ணீர் நம் உடலின் மீது தெளிக்கும்.
- இதனால் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படும். குறிப்பாக, பெண்களுக்கு இந்த பிரச்னை இந்த வெஸ்டர்ன் கழிப்பறையால் அதிகமாக வரும்.
முழுமையான கழிவு வெளியேற்றம்
- முன்னரே சொன்னதுபோல முழுமையான ‘கழிவு வெளியேற்றம்’ நடக்கிறது.
- மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது.
- பூமியின் ஈர்ப்பு சக்தியால், மலம் கீழ்நோக்கி வந்து வெளியேறுகிறது.
Image Source : Well or Die
மலச்சிக்கல் இருக்காது
- சரியான உணவுகள், சரியான வாழ்வியல் கடைபிடிப்போருக்கு இந்தியன் கழிப்பறையை பயன்படுத்துவோருக்கு மலச்சிக்கல் இருக்காது.
வேகம் அதிகமாக இருக்கும்
- வெஸ்டர்ன் கழிப்பறையில் உட்கார்ந்து மலம் கழித்தால், மலத்தின் வேகம் 130 நொடிகளுக்கு இருக்கும்.
- இதே இந்தியன் கழிப்பறையில் 50 நொடிகளில் வேகமாக மலம் வெளியேறிவிடும்.
நரம்புகள் பாதுகாக்கப்படும்
- சிறுநீர் பை, கர்ப்பப்பை, ப்ராஸ்டேட் ஆகியவை இழுக்கப்பட்டு சேதமாக வாய்ப்புகள் அதிகம்.
- இதுவே இந்திய கழிப்பறையில் இந்த உறுப்புகள் தொடர்பான நரம்புகள் பாதுகாக்கப்படும்.
இதையும் படிக்க : சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமாக 24 டிப்ஸ்
மூலநோய் வராது
- மலவாயும் அதை சுற்றிய இடமும் வெஸ்டர்ன் கழிப்பறையை பயன்படுத்தினால் அதிகமாக பாதிக்கும்.
- மூலநோய், சிவந்த நரம்புகள் பிரச்னை, வீக்கம் உள்ள நரம்புகள் காணப்படும்.
- இதுவே இந்திய கழிப்பறையில் இந்த பிரச்னையே இருக்காது.
கர்ப்பிணிகளுக்கு நல்லது
- ஸ்குவாட்டிங் நிலையில் உட்கார்ந்தால், கர்ப்பப்பையின் அதிக லோடை தாங்கும். கர்ப்பிணிகளுக்கு நல்லது.
- இதனால் சுகபிரசவத்துக்கும் சுலபமான பிரசவத்துக்கும் வழிவகுக்கும்.
பல நோய்கள் வராது
- அப்பெண்டிசிடிஸ், கொலைட்டிஸ், குடல் வீக்கம், செரிமான பாதை எரிச்சல் ஆகிய பிரச்னைகள் ஸ்குவாட் நிலையில் உட்கார்ந்தால் வராது.
Image Source : Toilymate, Erventures
கழிப்பறையை மாற்ற முடியாது என்றால் என்ன செய்யலாம்?
- எங்கள் வீட்டில் வெஸ்டர்ன் கழிப்பறைதான் இருக்கிறது எனச் சொல்பவர்கள். உங்களது காலுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக் கொள்ளுங்கள்.
- இதனால் ஓரளவுக்கு செமி-ஸ்குவாட் நிலை வரக்கூடும்.
- இதனால் வெஸ்டர்ன் கழிப்பறையினால் உண்டாகும் பிரச்னைகள் ஓரளவுக்கு தடுக்கப்படும்.
- கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகள், ஆண்கள், முதியவர்கள் என அனைவருக்குமே இந்திய கழிப்பறைதான் நல்லது.
இதையும் படிக்க : கர்ப்பக்கால விதிகள் … செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்…
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null