தவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்!

தவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்!

யோகா பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொண்டு தினமும் தவறாமல் செய்து வந்தால் நன்மைகள் ஏராளம். யோகா பயிற்சிகள் மனதையும், உடலையும் வலுப்படுத்தும் என்பதெல்லாம் எல்லோரும் அறிந்ததே! யோகாவில் பல நூறு ஆசனங்கள் இருப்பதும், ஒவ்வொரு ஆசனத்திலும் அற்புத பயன்கள் இருப்பதும் நிரூபிக்கப்பட்டது தான். யோகா பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்துவந்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் காணாமல் போகும்.

யோகாவால் பல பயன்பாடுகள் உள்ளன. இதை, உடல் எடையை குறைக்க, மனதை வலிமையாக்க, ஸ்ட்ரெஸ் குறைக்க, அழகாக என பல வழிகளில் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு என தனியாக ஆசனங்கள் இருக்கின்றன. சிறுவயதிலிருந்தே யோகா செய்வதால் உடல் உறுதியாவதுடன், மன வலிமை அசாத்தியமாக இருக்குமென்பதால் மாற்றுக்கருத்து கிடையாது.

இதே போல், மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள், இளம் வயது பெண்கள் தோற்றப் பொலிவிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கும் ஸ்பெசலாக சிறந்த யோகா பயிற்சிகள் உள்ளன. இவற்றை பின்பற்றுவதால், பல கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. பெண்களின் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும், 40 வயதிலும் 25 போல அழகாக அசரவைக்கவும், நோய் நொடிகளில் சிக்காமல் இருப்பதற்கும் யோகா பயிற்சிகள் உதவுகின்றன.

ஆண்களுக்கு என ஸ்பெஷலாக ஒன்றும் இல்லை. மேற்சொன்ன அனைத்து நன்மைகளும் ஆண்களுக்கும் பொருந்தும். எக்ஸ்ட்ராவாக ஆண்மையை, அதிகரிக்க, மெட்டபாலிசம் உயர்த்த மற்றும் செக்ஸ் டிரைவ் சிறப்பாக இருக்க என நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. மேலும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாமா?!

யோகா தரும் நன்மைகள்

சில பயிற்சிகள் அல்லது ஆசனங்கள் யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய படி எளிதில் இருக்கும். சில ஆசனங்கள் மட்டும் முறையாக பயிற்சி செய்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய படி இருக்கும். அதிலும் குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணிகள் குறிப்பிட்ட பயிற்சிகளை செய்யவே கூடாது. தெளிவாக கற்றுக்கொண்டு அல்லது தெரிந்துகொண்டு செய்வதே நல்லது. நன்மைகளைப் பார்க்கலாமா?!

உடல் எடை குறைக்க:

யோகா செய்வதால் கிடைக்கும் முதல் நன்மையே உடல் எடையை குறைக்க உதவுவது தான்.  ஆனால் வெகு சிலரோ யோகாசனங்களால் உடல் எடை குறையாது என்பர். ஆனால் அது மிகவும் தவறான புரிதல். உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பது மற்றும் எடையை குறைப்பதற்கு யோகா பயிற்சிகள் மிகவும் முக்கியமானது. வேறெந்த செயற்கை முறைகளும் இல்லாமல், சாதாரணமாக இயற்கை வழியிலேயே உடலின் எடையை குறைய வைப்பதற்கு யோகா ஆசனங்கள் மட்டுமே அற்புதமான வழி.

கட்டுடல் பெற:

உடல் நல்ல அமைப்பில் இருப்பதும், அழகாக தெரியவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். யோகா தொடர்ந்து செய்தால் உடல் சீரான அமைப்பைப் பெற்று, கட்டுக்கோப்பாக இருக்கும். உதாரணத்திற்கு, உடல் பருமனாக அதாவது BMI அளவிற்கு மேல் இருக்கும் பலருக்கு, உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்கும் என சொல்ல முடியாது. ஒருவருக்கு அடிவயிற்றில், மற்றவருக்கு இடுப்பில், வேறு சிலருக்கு தொடைகளில், பலருக்கு மேல் வயிற்றில் என வெயிட் வெவ்வேறு இடங்களில் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலைகளில், தவறாமல் யோகா செய்தால் கட்டுடல் பெற்று, அன்பானவர்களை அசரவைக்கலாம்.

உடல் வளைந்து கொடுக்க:

நம்மில் பலருக்கும், குனிந்து நமது விரல்களைத் தொடுவதற்கே பெரிய கஷ்ட்டமாக இருக்கும். இது உடலில் வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாததை காட்டுகிறது. இதனாலேயே நம் உடலில் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. யோகா பயிற்சிகள் சரிவர செய்வதன் மூலமாக, உடல் நன்றாக வளைந்துகொடுக்கும். உடல் ஃபிளக்சிபிலாக இருந்தால், பல நோய் தொற்றுகள் வரவேவராது.

எதிர்ப்பு சக்தி:

சிறுவர்கள் காலை, மாலை என இருவேளைகளிலும், மற்றவர்கள் கலையோ, மாலையோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ யோகா செய்தால் உடலின் எதிப்பு சக்தி நன்றாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி தான் நம் அனைவரின் ஆரோக்கியத்தின் அடையாளம். இது அதிகரிப்பதால், சாதாரண சளி, காய்ச்சல், சுவாச கோளாறுகள் என எதுவும் பக்கத்தில் கூட வராது. மருத்துவ செலவுகளும் மிச்சம், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

* யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்

null

null